இலங்கை
Trending

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!

யாழ். வலிகாமம் மயிலிட்டி பகுதியில் காணி விடுவிக்கப்படாத பிரதேச மக்கள் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று (15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1990 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 36 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், காணிகள் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்தே போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது, ஏமாற்றாதே ஏமாற்றாதே! மக்களின் காணிகள் மக்களுக்கே! என்ற கோசங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button