இலங்கை
Trending

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!

இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.

தொழில் அமைச்சும், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இணைந்து இந்த தொழிற்சந்தையை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த தொழிற்சந்தை நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவசொரூபன், ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த தொழிற்சந்தையில், 60 தொழில் நிறுவனங்கள், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கோடு, தொழில் தெரிவிற்கான வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டன.

மேலும் இந்த தொழில் சந்தையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button