இலங்கை
Trending

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை (12) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பார ஊர்திகள் மோதி விபத்துக்குள்ளாகின.

பாரஊர்தியை வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்டவேளை பின்னால் வந்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும், 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button