விளையாட்டு
Trending

காயம் காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க!

இங்கிலாந்துடன் நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க காயம் காரணமாக விலகி நாட்டிற்கு திரும்பவுள்ளார்.

முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார்.

இந்தக்காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹசரங்க விளையாடவில்லை.

அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற சச்சிந்து கொலம்பகே சிறப்பான அறிமுகத்தைப் பதிவு செய்துள்ளார்.

சச்சிந்து கொலம்பகே முதல் போட்டியில், சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, ஹசரங்க இலங்கைக்குத் திரும்பி ஓய்வெடுத்து, ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள தொடருக்கு ஆயத்தமாகவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button