
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அதன்படி தற்போதைய அபராதத் தொகையான பத்தாயிரம் ரூபாயை, ஒரு இலட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


அபராதத்துடன் சேர்த்து, 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அதேநேரம், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு நீதிமன்றம் அபராதம், சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டையும் சேர்த்து விதிக்க அதிகாரம் அளிக்கப்படவுள்ளது.

Follow Us



