
பிலிப்பைன்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
“கடலோர உயர்வு” என்று அழைக்கப்படும் இந்த அரிய புவியியல் நிகழ்வால், கடலுக்குள் மூழ்கியிருந்த பவளப்பாறைகள் மற்றும் கடற்புல் படுகைகள் வெளியே தெரிவதுடன், பெருமளவிலான கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.


நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதோடு, சுமார் 61 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



