இலங்கை
Trending

மூடப்பட்ட மலையகப் பாடசாலைகள் நாளை திறக்கப்படும்: மத்திய மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!

‎சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

‎குறித்த இரண்டு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வந்தது.

தற்போது காலநிலை படிப்படியாகச் சீரடைந்துள்ளதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையின் போது மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

‎இந்நிலையில், நாளை முதல் வழமையான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button