உலகம்
Trending

ரஷ்ய அணுமின் நிலையத்தை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணு மின் உற்பத்தி நிலையத்தின் ஆறு மின் அலகுகளுக்கு இடையில் பணியாளர்கள் நடமாடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூடத்தின் மீது இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அணு மின் உற்பத்தி நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள அந்த நிலையத்தின், அணு உலை அறையிலிருந்து சில மீற்றர்கள் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button