உலகம்
Trending

அமெரிக்கா அல்லது இஸ்ரேல், ஈரனின் மீது போர் தொடுத்தல் அது இந்திய பெருங்கடலுக்கும் பரவும்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தனக்கு எதிராக மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கு மோதலை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மூத்த ஆலோசகரான மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபவி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானுடனான மோதல் ஏற்கனவே பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி செங்கடல் வரை பரவியுள்ளதாக சஃபவி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் போர் வெடித்தால், இந்த மோதல் களம் இந்தியப் பெருங்கடல் அல்லது பிற பிராந்தியங்களுக்கும் விரிவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button