
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி A9 வீதி, பழைய கச்சேரிக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.


கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதேவேளை, சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் ‘உரிமை மீறல் மனு’ தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



