
இலங்கை நுவரெலியா,மஸ்கெலியா, சாமிமலை, கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த
15 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (29) காலையில் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் நான்கு பெண் தொழிலாளர்களும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் அதிகமான கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய ஒன்பது தொழிலாளர்களும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

Follow Us



