உலகம்
Trending

கொலம்பிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு!

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும்,பிராந்திய விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன.

கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று (10)காலை 7.34 மணியளவில் 7.4 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

மேற்கு கொலம்பியா முழுவதும் பல நூறு கிலோமீற்றர் தொலைவுக்கு நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.

பெரெய்ரா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு வேலே டெல் கௌகா பிராந்தியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button