இலங்கை
Trending

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரை நீக்கியமையை கண்டித்து சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளரின் பதவியை நீக்கியும்,நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும், சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று முழு நாள் கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button