இலங்கை
Trending

டெங்கு மரணங்கள் 71 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 93,115 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 7,777 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகும் மாவட்டமாக கம்பஹா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 19,825 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button