உலகம்சுவிஸ்
Trending

மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது: நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்புக்கு வருகிறது.

இந்த சர்ச்சைக்குரிய பிரேரணையை, சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் “சுவிஸ் மக்கள் கட்சி” முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் 9.1 மில்லியனாக காணப்படுகிறது.

2002ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பெரும்பகுதி புலம்பெயர்தலால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், மக்கள் தொகை 9.5 மில்லியனைத் தாண்டும் நிலையில்,அரசாங்கம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அடைக்கலக் கோரிக்கைகள் மற்றும் குடும்ப ஒன்றிணைவு தொடர்பான அனுமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

மேலும், 10 மில்லியன் எல்லை மீறப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துடனுள்ள மக்கள் சுதந்திரமாக நகரும் ஒப்பந்தத்திலிருந்து விலகும் நிலையும் உருவாகலாம்” எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button