உலகம்
Trending

ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எந்தவித இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டால், கடுமையான பதிலடி வழங்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

அத்துடன், பிராந்தியத்திலுள்ள புதிய அமெரிக்கத் தளங்களும் இலக்காகக் கொள்ளப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை எச்சரித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பரிந்துரைத்த கடற்பாதையைப் பின்பற்றாமல் சென்றதாகக் கூறப்படும் மற்றொரு வர்த்தகக் கப்பல் மீது, எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஓமான் கடற்பரப்பை ஊடறுத்து அமெரிக்கா பரிந்துரைத்த பாதையில் பயணித்த மூன்று வர்த்தக எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதிலடி தாக்குதல்கள் இடம்பெற்றன.

அமெரிக்க தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்த்தோடு, 115 பேர் காயமடைந்திருந்தனர்.

அதற்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button