இலங்கை
Trending

நெடுந்தீவு கடலில் காணாமற் போன மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெடுந்தீவு தாளைத்துறையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் கடந்த 11 ஆம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில், தமிழகம் நாகபட்டினம் கடற்கரையில் குறித்த மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

உரிய விசாரணைகளின் பின்னர் சடலத்தை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button