இந்தியாஉலகம்
Trending

நோர்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த மே 25ஆம் திகதி தொடங்கி ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான தமிழ்நாட்டை சேர்ந்த டி. குகேஷ், மற்றொரு தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரூஜா, வெஸ்லி சோ மற்றும் கெய்மர் ஆகிய 6 பேர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம், நோர்வே செஸ் சாம்பியனான பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை 20 வயதான பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button